காஷ்மீர் மாநிலம் கெரான் செக்டார் பகுதியில் கடந்த 5ம் தேதி 5 பயங்கரவாதிகளை, இந்திய ராணுவத்தின் சிறப்பு கமாண்டோ பிரிவினர் சுட்டு கொன்றனர். 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். கொல்லப்பட்ட பயங்கரவாதிகளில் 3 பேர் காஷ்மரை சேர்ந்தவர்கள். மற்றவர்கள் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள். அதேநேரத்தில், சமீபகாலமாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. எல்லைக்கட்டுப்பாட்டில் உள்ள ஷர்தா, துத்னியால், ஷாகோட் பகுதியில், இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதை பாகிஸ்தான் ராணுவம் உறுதி செய்துள்ளது. இதில் 4 பொது மக்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டில், இந்திய ராணுவம் 708 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் பொது மக்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ளது. இந்தியா தாக்குதலுக்கு, பாகிஸ்தான் பதிலடி கொடுத்ததாகவும் தெரிவித்தது.
அதில் பொது மக்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். 42 பேர் காயமடைந்துள்ளதாக பாகிஸ்தான் அரசு குற்றம்சாட்டியுள்ளது