அதேநேரத்தில் பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், கடந்த 10ம் தேதி, கெரான் செக்டார் பகுதியில், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலுக்கு இந்திய ராணுவம் உரிய பதிலடி கொடுத்தது. அதில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 15 பேர் உயிரிழந்தனர். 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அங்கிருந்த பயங்கரவாத பயிற்சி முகாம்கள் சேதமடைந்தன என தெரிவித்தனர்.
எல்லை ஒட்டிய பகுதிகளில், செயல்படும் பயங்கரவாத பயிற்சி முகாம்களில், லஷ்கர், ஜெயிஷ் இ முகம்மது, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளை சேர்ந்த பயங்கரவாதிகள், காஷ்மீருக்குள் ஊடுருவ காத்திருக்கின்றனர். இதனால், அவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தவிர இந்திய ராணுவத்திற்கு வேறு வழியில்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பயங்கரவாத பயிற்சி முகாம்கள் சேதமடைந்தன என தெரிவித்தனர்.